நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாணவர்கள் சிலருக்கு புவியியல் வினாத்தாளின் ஒரு பகுதியை வழங்காத சம்பவம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் கல்லூரியில் குறித்த பரீட்சை நிலையத்தில் பணிபுரிந்த அதிகாரிகளிடம் பரீட்சை திணைக்களம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புவியியல் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை என பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முகம் கொடுத்த பரீட்சார்த்திகள் குறித்து தனித்தனியாக விசாரணைகள் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பரீட்சை திணைக்களத்தின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.