கொழும்பு
பேக்கரிகளில் எடைக்குறைவான பாண் விற்பனையை இலக்காகக் கொண்டு சோதனைகளை ஆரம்பிக்க தீர்மானித்ததை அடுத்து, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேக்கரி உரிமையாளர்கள் ஒரு இறாத்தல் பாணின் விற்பனை விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று முதல் பேக்கரிகளில் எடை குறைந்த பாண் விற்பனையை இலக்காகக் கொண்டு சோதனைகளை ஆரம்பித்தது.
அதன்படி, பாண் ஒன்றின் விற்பனை விலை 130 ரூபாவாக இருந்த நிலையில், 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது . எடை 450 கிராம் என அரசாங்கம் அறிவித்திருந்தாலும், பெரும்பாலான கடைகளில் கிட்டத்தட்ட 350 கிராம் எடையுள்ள பாணே விற்பனை செய்யப்படுகிறது.