பிர்தௌசியா அஷ்ரப்
கொழும்பு
பாணின் நிறை தொடர்பாக இலங்கை பூராகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை (05) வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நகர் பகுதி மற்றும் கூமாங்குளம், பட்டானிச்சூர், தோணிக்கல், மூன்றுமுறிப்பு பகுதிகளில் காணப்படும் வெதுப்பகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பாணின் நிறை தொடர்பான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி சாமர வன்னிநாயக தலைமையிலான குழுவினர் 10 வெதுப்பகங்களில் மேற்கொண்ட சோதனைகளில் இரண்டு வெதுப்பகங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்களும் மேற்கொள்ளப்படவுள்ளது