இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்காகப் பல தசாப்தங்களாகப் பாடுபட்ட தென்னாபிரிக்க நீதிபதி நவநீதம் (நவி) பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்ற ஐந்தாவது தென்னாபிரிக்கர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சர்வதேச நீதியை நிலைநாட்டுவதிலும் நீண்டகாலமாகப் பங்களித்து வரும் நவநீதம் பிள்ளையின் பணிகள் இவ்விருதின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.








