கடந்த 14 வருடங்களாகத் தொடர்ச்சியாக நடைபெறும், யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் இந்த வருடத்திற்கான நிகழ்வு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் சுமார் 300 வர்த்தக கண்காட்சியகங்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
15ஆவது வருடமாக நடைபெறவுள்ள இந்த வர்த்தக கண்காட்சியின் மூலம் நாடளாவிய ரீதியாகச் சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் பெரிதும் பயனடைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொறோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக உற்பத்தியாளர்களுக்கு நிவாரணப் பொதியொன்றை வழங்க நிதி அமைச்சு முன்வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.