தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் தான் மாகாண சபைத் தேர்தல் நடத்தக் கூடாது. தேர்தலை ஒத்திப் போடுமாறு என்று கூக்குரலிட்டவர்கள் தான் இன்று நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் nதிவித்தார்.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட வடமேற்கு மாகாண சபையின் பிரதம செயலாளருடனான சந்திப்பு மற்றும் வட மேல் மாகாணத்தின் எதிர்காலத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் . நசீர் அஹமட் தலைமையில மாகாண சபை வளாகத்தின் லிச்சாவி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது தற்போதைய தென் மாகாண ஆளுநர் ல~;க்யாப்பா அபேவர்தன அவர்களும் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் ஆளுநர் நசீர் அஹமட் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
புதிய வடமேல் மாகாண ஆளுநர் திரு.நசீர் அஹமட், “சுற்றுலாத்துறை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்தி வடமேல் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநா நசீர் அஹ்மட் தெரிவித்தார்.
குருநாகல் ஒரு சுற்றுலா வலய மையப்பகுதியாகும். இன்று தம்புள்ளைக்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்? இதன் மூலம் ஹபரனா நாம் ஏன் செய்ய வேண்டும்?” இதனை நாம் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும்.
எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள குருநாகல், தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அத்துடன், இந்த நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அதனை தூக்கி நிறுத்திய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே. சஜித் பிரேமதாசவிடம் கூறினார், ஆனால் அவர் இந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற முன்வரவில்லை.
மாகாண சபைகளை நடத்தக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீனும் தான் அன்று எவ்வளவோ கூச்சலிட்டனர். எதிர்காலத்தில் வடமேல் மாகாணத்தில் சகல துறைகளிலும் சிறந்த வளமுள்ள மாகாணமாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது தென் மாகாணத்தின் புதிய ஆளுநர் லக்~;மன் யாப்பா அபேவர்தன, வடமேல் பிரதம செயலாளர் தீபிகா குணரத்ன, பிரதான அமைச்சின் செயலாளர் , நயன காரியவசம், ஆளுநரின் செயலாளர் இந்திக்க இளங்ககோன் மற்றும் பல அமைச்சுத் தலைவர்கள் மற்றும் துறையினர் கலந்து கொண்டனர்
இக்பால் அலி