ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு கப்பல்கள் மீது ஈரானிய துப்பாக்கிப் படகுகள் 18.04.2026 தாக்குதல் நடத்தியுள்ளதாகத் வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதோடு, கப்பல்களுக்கும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஓமானின் வடகிழக்கே இடம்பெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த இரண்டு கப்பல்களும் பின்வாங்கித் திரும்பியுள்ளன.
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியதற்குப் பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்குவதற்கு ஈரான் இன்று எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக, ஏராளமான வணிகக் கப்பல்கள் அந்த நீரிணை ஊடாகச் செல்வதைக் கைவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










