முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனு இன்று (6) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் (FCID) பொறுப்பதிகாரியை எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி, இது தொடர்பான காரணிகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ தமது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று (5) பிற்பகல் இந்த முன்பிணை மனுவை தாக்கல் செய்திருந்தார்.
மருத்துவ காரணங்களுக்காக அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த அவர், நேற்று நள்ளிரவு மீண்டும் நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது








