விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திஸாநாயக்கவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியான கலாநிதி ரோஷனி திஸாநாயக்க, இதற்கு முன்னர் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.







