நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் சீரமைப்புப் பணிகள் காரணமாகத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இதனால் தேசிய மின் விநியோகத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாது என தேசிய அமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது.
குறித்த மின் உற்பத்தி இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய அமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய மின் விநியோகத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.








