சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யெமன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தென்மேற்கு பகுதியிலுள்ள செங்கடல் துறைமுகமான அல்-மகா மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யெமன் டுடே தொலைக்காட்சி மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான சபா தொலைக்காட்சி ஆகியன இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
துறைமுகத்தின் பணிப்பாளர் யெமன் டுடே ஊடகத்துக்கு தெரிவித்த தகவலின்படி, துறைமுக வளாகத்தில் உள்ள பொதுமக்கள் பகுதிகளை இலக்காகக் கொண்டு பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலுக்கு ஹூதி அமைப்பு இதுவரை பொறுப்பேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








