வறட்சியான காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய வனத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வலயங்களை மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக குறித்த இரு வலயங்களும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
நாட்டில் நிலவிய கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக வனவிலங்குகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டும், வீதிக் கட்டமைப்புகளைப் புனரமைக்கும் பணிகளை முன்னெடுப்பதற்காகவும் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி முதல் யால தேசிய வனத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் வலயங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், தேசிய வனம் மீண்டும் திறக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் முகாம் நிலங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.








