மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக, நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 23ஆம் திகதி பெய்த மழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடும் எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நீர்த்தேக்கத்திற்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.








