முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜராகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தற்போது மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் இருப்பதால், மாற்றுத் திகதியை வழங்குமாறு அவரது தரப்பினரால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘சிரிலிய சவிய’ நிதிக் கணக்கு தொடர்பானதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்காக, ஷிராந்தி ராஜபக்ஷ இன்று FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தார்.








