இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (16) கொழும்பு, ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
கொழும்பில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர், முன்னாள் ஜனாதிபதியை சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் சந்தித்த முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.
இந்தச் சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதி தூதுவர் சூ யான்வேய், ஆலோசகர் மேய் ஜிங் மற்றும் மூன்றாம் செயலாளர் ஜின் என்சே ஆகியோரும் கலந்துகொண்டனர்.





