முதல் முறையாக, இலங்கையில் இருந்து தூதருக்கு இணையான நிலைமையுடைய பிரதிநிதி ஒருவர் பாலஸ்தீனுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எம். ஃபௌசரை பாலஸ்தீனில் இலங்கையின் பிரதிநிதியாக நியமித்ததுடன், இன்று (04) பிற்பகல் அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஃபௌசர் இடையே நட்புறவான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இலங்கை எப்போதும் பாலஸ்தீனின் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளது என்பதையும், தமது பதவிக்காலத்தில் இலங்கை அரசின் நிலைப்பாட்டிற்கு இணங்க பாலஸ்தீனில் பணியாற்றுவதற்கு தாம் எதிர்பார்க்கிறேன் என்பதையும் திரு ஃபௌசர் குறிப்பிட்டார்.
மேலும், அவர் நீண்டகாலமாக இலங்கை பாலஸ்தீன் ஒற்றுமைக் குழுவின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் பின்னர், அமைச்சர் விஜித ஹேரத், ஃபௌசர் தமது கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் எம். ஃபௌசர் 04.05.2026 இரவு தமது கடமைகளைத் தொடங்குவதற்காக இலங்கையில் இருந்து புறப்பட உள்ளார்.










