இஸ்மதுல் றஹுமான்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் நேற்று திங்கட்கிழமை காலை ஏற்பட்ட மோதலில் 8 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்பட 30 பேர் உயிரிழந்தாகவும் 100 மேற்படடவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பகல் தன்டனை பெறும் சிறைக்கைதிகளினதும் விளக்கமறியல் சிறைக் கைதிகளினதும் இரு குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டது.
போதைப் பொருள் தொடர்பான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்குவதாக ஏற்பட்ட சார்ச்சையிலேயே இந்த மோதல் உருவெடுத்ததாக தெரியவருகின்றது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, கட்டுவெல்லகமவைச் சேர்ந்த சுரேஷ் புஷ்பகுமாரா என்ற கைதியாலேயே இந்த மோதல் திட்டமிடப்பட்டது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பலியான இரு சிறைக்கைதிகளின் முகங்களை அடையாளம் கானமுடியாதாவாறு சிதைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு இரவு மோதல் தனிந்திருந்த போதும் நேற்று திங்கட்கிழமை மீண்டும் மோதல் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (06) காலை உணவு பரிமாறுவதற்காக சிறை அதிகாரிகள் உள்ளே நுழைந்தபோது, கைதிகள் அவர்களைத் தாக்கினர். நிலைமையைக் கட்டுப்படுத்த உள்ளே நுழைந்த ஏனைய அதிகாரிகளையும் கைதிகள் தாக்கினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் அதிகாரிகளும் கைதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது துப்பாக்கியால் வெடி வைத்துக் கொண்டுள்ளனர். சிறையின் அலுவலகம், மருந்தகம் மற்றும் ஆயுதக் கிடங்கு ஆகியவை கைதிகளால் உடைத்து உள்ளே புகுந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
காயமடைந்தவர்களை அவசரமாக நோயாளிகள் காவு வண்டியில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதைக் கானக்கூடியதாக இருந்தன. அங்கு ஒன்று கூடிய சிறைக்கைதிகளின் உறவினர்கள் கதறி அழும் காட்சிகள் மனதை உருக்குகின்றன.
மோதலைக் கட்டுப்படுத்த பக்கத்து பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸாரும் ஆயுதப் படையினரும் அழைக்கப்பட்டுள்ளன.
நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கிச் சுட்ட பிறகு, கலவரத் தடுப்புப் பொலிஸாரும் விசேட அதிரடிப் படை அதிகாரிகளும் சிறை வளாகத்திற்குள் நுழைந்து, காயமடைந்த அதிகாரிகளையும் மற்றவர்களையும் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து உடனடியாக நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.
கைதிகள் சிறையின் பிரதான வாயில் வழியாகத் தப்பிக்க முயன்றபோது, சிறையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பணியில் அமர்த்தப்பட்ட பொலிஸார் மற்றும் கலவரத் தடுப்புக் காவல்துறை அதிகாரிகள் கைதிகளைக் கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையில், சிறை வளாகத்தைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகாப்டரையும் ஒரு ட்ரோனையும் பணியில் ஈடுபடுத்தியிருந்தன. அதிகாரிகளிடமிருந்து திருடப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டு கைதிகள் ட்ரோன் மீது சுட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சில சிறைக்கைதிகளை நீர்கொழும்பு தழுபொத்த திறந்தவெளி வாலிபர் குற்றவியல் சிறைச்சாலைக்கு இடமாற்றியுள்ளனர்.
இதுவரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் 8 உட்பட 30 பேர் பலியாகியுள்ளதாகவும் 100 மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைதிகளின் நலனைப் பற்றி விசாரிக்க வந்த உறவினர்களும் நண்பர்களும், தங்கள் உறவினர்கள் மற்றும் கைதிகள் குறித்த தகவல்களைக் கேட்டு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளனர். அவர்கள் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் ஏறி, கைதிகளைப் பாதுகாக்குமாறு கோஷமிட்டுக் கொண்டிருக்க, சிறை அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் நிலைமையை விளக்குவதற்கும் உறவினர்களைக் கட்டுப்படுத்துவதற்கும் கடுமையாகப் போராடினர். வருகின்றனர்.
சிறைக் கைதிகளின் உறவினர்கள் தமது உறவுகளும் பலியாகியுள்ளதா கியமடைந்துள்ளதா என அறிந்துகொள்ள நீர்கொழும்பு வைத்தியசிலை நுழைவாயிலில் குழுமியிருந்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் தகறாரில் ஈடுபடுவதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.









