( ஐ. ஏ. காதிர் கான் )
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும், மினுவாங்கொடை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இணைந்து, இம்முறை தேசிய முஹர்ரம் இஸ்லாமியப் புத்தாண்டு (ஹிஜ்ரி – 2026/1448) நிகழ்வை, மினுவாங்கொடை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று (17) புதன்கிழமை இரவு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து 7.30 மணியளவில் நிகழ்வு மிக விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வில், சமய கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் அஷ்ஷேக் முனீர் முழஃப்பர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு “முஹர்ரம் இஸ்லாமிய புத்தாண்டு” பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரும் இங்கு சிறப்புரை வழங்கினார்.
கெளரவ அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாகவும் நிகழ்வில் பலர் பங்கேற்றிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், பிரமுகர்கள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் அனைவருக்கும், பள்ளிவாசல் நிர்வாக சபையினரால் இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.









