இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தம் 1,408,620 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.இதேவேளை, ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரையான 9 நாட்களில் 65,202 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 13,483 ஆகும். பிரித்தானியாவிலிருந்து 7,460 பேரும், பிரான்ஸிலிருந்து 5,388 பேரும் வருகை தந்துள்ளனர்.ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 351,713 ஆகப் பதிவாகியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து 137,861 பேரும், சீனாவிலிருந்து 92,940 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அந்த மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்ரா அன்சார்








