செப்டம்பர் மாதத்திற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த வருவாய் இலக்கை மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, அதனை விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் பதிவு செய்துள்ளது.
இதன்படி, செப்டம்பர் மாதத்திற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கு, நேற்று (23) நிலவரப்படி எட்டப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று வரை 199,348 மில்லியன் ரூபாய் வருவாய் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்திற்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மொத்த வருவாய் இலக்கு 2,206.995 பில்லியன் ரூபாய் ஆகும்.
நேற்று (23) நிலவரப்படி, சுங்கத் திணைக்களம் 2,058.033 பில்லியன் ரூபாய் மொத்த வருவாயை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, கடந்த 2025ஆம் ஆண்டிலும் இலங்கை சுங்கத் திணைக்களம் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்குகளை விஞ்சி, 2,557.535 பில்லியன் ரூபாய் வருவாயை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







