புத்தாண்டு பண்டிகைக் காலத்தையொட்டி, பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் தொடர்பான ‘பொலிஸ் மா அதிபர் தினம்’ மற்றும் ‘பொலிஸ் மா அதிபர் பொது மக்கள் நிவாரண தினம்’ ஆகியன நடைபெறாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் குறித்து 16.04.2026 நடைபெறவிருந்த பொலிஸ் மா அதிபர் தினம் நடைபெறமாட்டாது. அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவிருந்த பொலிஸ் மா அதிபர் பொது மக்கள் நிவாரண தின நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.









