முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு எதிராக ‘நீல அறிவித்தல்’ (Blue Notice) ஒன்றை விடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) சர்வதேச பொலிஸாரான இன்டர்போலிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது








