அனைத்து வகுப்பறைகளுக்கும் ஸ்மார்ட் போர்டுகளை அரசாங்கம் வழங்காது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அனைத்து கல்வி நிலைகளிலும் ஸ்மார்ட் போர்டுகள் அவசியமானவை அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு உரிய வயதில், பொருத்தமான முறையில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், ஸ்மார்ட் போர்டுகளை கொள்வனவு செய்வதற்காக பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் என பாடசாலை அதிபர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
“பெற்றோரிடம் பணம் வசூலிக்க வேண்டாம் என அதிபர்களிடம் கூறுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
சாதனங்கள் தேவையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும், அது தொழில்நுட்ப அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தேவை மற்றும் மாணவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் திட்டமிடப்பட்ட அடிப்படையில் ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.







