பிரபல இலங்கை மொடல், நடிகை மற்றும் அழகுராணிப் போட்டி பயிற்றுவிப்பாளரான சுல்பத்மேந்திர குமாரபதிரண தனது 46ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று இரவு Waters Edge-இல் நடைபெற்ற அழகுராணிப் போட்டி நிகழ்வொன்றை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்ததுடன், தனது துறையில் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும், மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
அழகுராணிப் போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட சில மணி நேரங்களிலேயே அவர் திடீரென உயிரிழந்த சம்பவம், இலங்கையின் மொடலிங் மற்றும் அழகுராணிப் போட்டித் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அழகுராணிப் போட்டி நிகழ்வு









