450 கிராம் எடையுடைய பாணின் விலை இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வழக்கமாக விற்பனை செய்யப்படும் 450 கிராம் எடையுடைய பாணுக்கே இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.









