நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் (CIABOC) இன்று முன்னிலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் விசேட திட்டமொன்றுக்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்கள், ரவி கருணாநாயக்கவின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், இதனால் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணை தொடர்பில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் முன்னிலையாகத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் அவரது இல்லத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, ரவி கருணாநாயக்க இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.









