இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 31.124 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.








