எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துக்கு ஆதரவளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.
அச்சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (27) கூடியதன் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நாடளாவிய பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக இந்த விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.








