தெஹிவளை, கவுதானை பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்று, அவருக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து உதவியதாகக் கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








