யெமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் சவூதி அரேபியாவின் தெற்குப் பகுதியை நோக்கி ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக யெமனுக்கான சவூதி தலைமையிலான கூட்டணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பாலிஸ்டிக் ரகத்தைச் சேர்ந்த குறித்த இரண்டு ஏவுகணைகளும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இடைமறிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, இதே பகுதியில் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலின்போது ஹூதிகளால் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையொன்றையும் வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து அழித்துள்ளதாக கூட்டணியின் பேச்சாளர் கேணல் துர்கி அல் மாலிகி தெரிவித்திருந்தார்.







