கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண்களில் இன்று (04) குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.இதன்படி, அனைத்துப் பங்குச் சுட்டெண் (ASPI) 421.48 புள்ளிகளால் (2.09%) அதிகரித்து 20,541.12 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, முன்னணி நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P SL20 சுட்டெண் 112.52 புள்ளிகளால் (1.97%) உயர்வடைந்து 5,838.09 புள்ளிகளாக நிறைவடைந்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வு 3.85 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.








