கொட்டா வீதி புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படவிருந்த அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
களனிவௌி பாதையின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த புகையிரத கடவையின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் 23.05.2026 காலை 09.30 மணி முதல் 24.05.2026 காலை 07.30 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், குறித்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் தினங்கள் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.








