கலா வாவி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (23) 8 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை (23) முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இஹலகம, கலா வாவி, மருதன்கடவல, திருப்பனை மற்றும் கெக்கிராவ ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
நீர் விநியோகத் தடையினால் ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் சபை அறிவுறுத்தியுள்ளது.








