மஜ்ஜிம நிகாயவில் உள்ள பால பண்டித சூத்திரத்தின்படி, மனித வாழ்க்கையைப் பெறுவது மிகவும் அரிதான ஒரு காரியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது வெசாக் தினச் செய்தியில் அவர் வலியுறுத்திக் கூறும்போது, சாதி, மதம் மற்றும் குல அடிப்படையில் பிரிந்து இருப்பது அர்த்தமற்றது என்பதை புத்த பெருமான் சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.








