வொசக் தினமானது பௌத்த கலாச்சாரம், பௌத்த சாசனத்தின் முன்னேற்றம் மற்றும் அந்த மகா கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினருக்குக் கையளித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
தனது வெசாக் தினச் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடும் பௌத்த மக்களும் புத்த பெருமானால் அருளப்பட்ட புனித சத்தர்மத்தை மனதிலிருத்தி, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உறுதிபூண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திலித் ஜயவீரவின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி வருமாறு:
புனிதமான சம்புத்தரின் முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் வெசாக் பூரணை தினம், பல்லாயிரக்கணக்கான பௌத்தர்கள் பக்திப் பரவசமடையும் தினமாகும்.
நமது நாட்டு பௌத்த மக்கள் அநாதி காலத்திலிருந்தே புனித வெசாக் பூரணை தினத்தில் சமய நவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களிடையே மிகவும் வர்ணமயமான மற்றும் விசித்திரமான வெசாக் கொண்டாட்ட கலாச்சாரம் நம் நாட்டிற்கே உரித்தானது.
வெசாக் பண்டிகையுடன் இணைந்த பௌத்த கலாச்சாரம், பௌத்த சாசனத்தின் முன்னேற்றம் மற்றும் அந்த மகா கலாச்சாரத்தை வருங்கால சந்ததியினருக்குக் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும், பௌத்த சாசனத்திற்குப் பல சவால்கள் எழுந்துள்ள இக்காலகட்டத்திலேயே நாம் இம்முறை வெசாக் பண்டிகையைக் கொண்டாடுகிறோம்.
எனவே, நமது நாடும் பௌத்த சமூகமும் புத்த பெருமானால் போதிக்கப்பட்ட புனித சத்தர்மத்தை நினைவுகூர்ந்து, அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உறுதிபூண வேண்டிய காலமிது.
இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் அனைத்து பௌத்தர்களுக்கும், உன்னதமான வெசாக் தினமாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்.









