ஈரான் தனது இராணுவ திறனை “எதிரிகளை” விட வேகமாக மீளக் கட்டியெழுப்பி வருவதாக அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் Fars செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது கருத்துகளின்படி, ஒவ்வொரு மோதல் சுற்றிலும் ஈரானிய இராணுவம் முன்னைய சுற்றை விட சிறப்பாகச் செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“எமது ஏவுகணைகளைத் தடுக்க முடியாது என்ற முடிவுக்கு எதிரியை நாம் கொண்டு வந்துள்ளோம்” என காலிபாஃப் கூறினார்.
“எதிரிகள் இதை அறிந்துகொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இடம்பெறும் போர் சுற்றுகளில், தர ரீதியாகவும் எண்ணிக்கையிலும் நாங்கள் அதிக மேலாதிக்கத்தைக் கொண்டிருப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.








