பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்காக பணியமர்த்தப்பட்ட மூன்று ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் பெறுவதற்கு அவர் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக அண்மையில் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அங்கு முன்னிலையாகவில்லை.
இதனையடுத்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முன்தினம் அவரது வீட்டுக்குச் சென்றிருந்தது. எனினும், அந்த நேரத்தில் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை.
தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறு திகதி ஒன்றை வழங்குமாறு அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.









