இலங்கையின் பணவீக்க விகிதம் ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் 6.5% ஆக இருந்த பணவீக்கம் ஜூலையில் 7.2% ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, உணவுப் பிரிவுக்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 3.3% ஆக இருந்த நிலையில், ஜூலையில் 4.9% ஆக அதிகரித்துள்ளது.
எனினும், உணவு அல்லாத பொருட்களுக்கான பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.3% ஆக இருந்த நிலையில், ஜூலையில் சிறிதளவு குறைந்து 9.2% ஆக பதிவாகியுள்ளது.









