இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம், நாட்டை விட்டு மேற்கு நோக்கி நகர்ந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அதன் தாக்கம் இன்றும் (23) நாட்டின் பல பகுதிகளில் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, இன்று (23) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசமொன்று உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குறைந்த அழுத்தப் பிரதேசம் பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








