இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக உயர்ந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 ஜூலை மாதத்தில் 7.3% ஆக பதிவாகியிருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக அதிகரித்துள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (CCPI) அடிப்படையில், உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 6.3% ஆக இருந்த நிலையில், ஆகஸ்டில் 8.5% ஆக குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.
அதேவேளை, உணவு அல்லாத பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.8% ஆக இருந்த நிலையில், ஆகஸ்டில் சிறிதளவு குறைந்து 7.7% ஆக பதிவாகியுள்ளது.
முழுமையான அறிக்கை:https://www.statistics.gov.lk/WebReleases/CCPI_20260831E









