இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் காரணமாக, இன்று (20) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை தீவிரமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.








