முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் தற்போது வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும், அண்மையில் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட ஷிரான் பாசிக் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பிலும் இதன்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.








