அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செனட்டில் 54 ஆசனங்களையும், பிரதிநிதிகள் சபையில் 225 ஆசனங்களையும் கைப்பற்றி ஜனநாயகக் கட்சி தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகள், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தின் இறுதி இரண்டு ஆண்டுகளில் அவரது சட்டமூலத் திட்டங்களைத் தடுக்கும் அதிகாரத்தை ஜனநாயகக் கட்சிக்கு வழங்குகின்றன.அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, வர்த்தக வரிகள் மற்றும் ஈரானுக்கு எதிரான போர் ஆகியவற்றுக்கு எதிராக அமெரிக்க வாக்காளர்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈரானுக்கு எதிரான போர் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பாரிய அரசியல் பின்னடைவாக அமைந்துள்ளன.








