ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் முன்வைத்துள்ள நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் வரை, நீரிணையைத் திறக்கப் போவதில்லை என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் மற்றும் கட்டார் ஊடாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








