அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தைகளில் தங்களுக்கே வலுவான நிலை இருப்பதாகக் கருதுவதாக அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியல் அமைப்புகள் தொடர்பான ஆய்வாளர் சலீம் சகூர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா காலம் தமக்குச் சாதகமாக இருப்பதாகவும், தற்போதைய நிலையில் தங்களிடம் வலுவான பேச்சுவார்த்தை வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, ஈரானும் தனது நிபந்தனைகளில் உறுதியாக இருந்து, விட்டுக்கொடுப்புகளை நிராகரிப்பதன் மூலம் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பும் தங்களிடமே வலுவான பேச்சுவார்த்தை அம்சங்கள் இருப்பதாகக் கருதுவதால், சமரசத்திற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உடன்பாடு எட்டப்படாமல் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், களநிலை மற்றும் இராணுவ ரீதியான பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.








