நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த வாழைச்சேனையில் உள்ள உணவகத்திற்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2026 ஜூன் 4ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து, ‘அமிர்தம்’ உணவகத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது, அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்த ஒரு லீற்றர் போத்தல் குடிநீர் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை உணவக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.
இதனையடுத்து, வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.







