அப்ரா அன்சார்
‘டித்வா’ சூறாவளி மீட்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், அக்குரணை துனுவில வீதியில் தாங்குச் சுவர் அமைக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த வியாழக்கிழமை (10) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினரும் அக்குரணை DCC தலைவருமான ரியாஸ் பாரூக்கின் முன்மொழிவின் அடிப்படையில், மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை (PRDA) இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
அக்குரணை துனுவில வீதியின் 0+200 கிலோமீற்றர் பகுதியில் வலதுபுறத்தில் (RHS) தாங்குச் சுவர் அமைப்பதே இத்திட்டத்தின் பிரதான பணியாகும்.
இதற்காக 4,810,894.45 ரூபாய் பெறுமதியான ஒப்பந்தம் C-Max Engineering நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பணிகள் 90 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 2026 டிசம்பர் 08ஆம் திகதி திட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் ஒப்பந்த இலக்கம் CPC/PRDA/DITW/K/HAR/2026/14 என தெரிவிக்கப்பட்டுள்ளது.












