கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கு உள்ளான பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான நதுன் சிந்தக என்று அழைக்கப்படும் ஹரக் கட்டாவை விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க நேற்று (29) உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்மானித்து, இந்த உத்தரவை பிறப்பித்த நீதவான், புகாரில் இரண்டாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டு நீதிமன்றத்தை விட்டு விலகிய மஞ்சு எனப்படும் டிரான் கிருஷாந்தவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
நதுன் சிந்தக உட்பட மூன்று பேருக்கு எதிராக கொழும்பு குற்றப்பிரிவு தாக்கல் செய்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் சாட்சியங்களை கோரிய பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்