புத்தளம், பாலாவி பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 994 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் சந்தேக நபர் ஒருவரை புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
புத்தளம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பாலாவி பகுதியில் விசேட வீதி சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, சுங்க வரி செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 994 கிலோ 150 கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










