அம்பேவளை, பட்டிப்பொல பகுதியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்று, கட்டுப்பாட்டு விலையை மீறி குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 500,000 ரூபாய் அபராதம் விதிக்க நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின்படி, 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த நிறுவனம் அதனை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் நுவரெலியா மாவட்ட அலுவலக அதிகாரிகளினால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உத்தியோகபூர்வ உளவாளி ஒருவர் மூலம் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தில் விடயங்கள் அறிக்கை செய்யப்பட்டதையடுத்து, குற்றத்தை ஒப்புக்கொண்ட நிறுவனத்திற்கு நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.









